Malaysia

மலேசிய காற்பந்தை யார் ஆட்டிப்படைக்கின்றனர்? நடுவரின் செயல்நடவடிக்கைகள் ஒருதலைபட்சமாக இருந்தது?

ஈப்போ, ஏப்.28-
மலேசிய காற்பந்து இனி எங்கே போகிறது? மலேசிய கிண்ண இறுதியாட்டத்தில் சிலாங்கூர் நடுவர் ரஸ்லான் ஜோப்ரி அலி மிகவும் தரங்கெட்ட நிலையில் ஆட்டத்தை வழிநடத்தினார்.

யாருக்கோ பயந்துக்கொண்டு பாராபட்சமாக முதல்பாதி ஆட்டத்தை வழிநடத்தியது, மலேசிய காற்பந்து உலகிற்கு கேவலமாக இருந்தது அவர் செயல் எனலாம்.

இந்த இறுதியாட்டத்தில் 14 வது நிமிடத்தில் ஸ்ரீபகாங் மத்திய திடல் ஆட்டக்காரர் தி.தினகரன் அடுத்த அபார கோல் ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது. இருப்பினும், இறுதியாட்டத்தின் நடுவர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டது மிகவும் தெளிவாக காணமுடிந்தது.

இந்த நடுவருக்கு பட்டறிவும், வழிநடத்தும் தன்மையும் மிக குறைவே. காரணம் பகாங் மத்திய திடல் ஆட்டக்காரர் செர்ஜியோ அகிரோவிற்கு எண் 16, முதலில் சிவப்பு அட்டையை வழங்கி விட்டு பின் மஞ்சள் அட்டை வழங்கியது மிகவும் கேவலமான செயல் நடவடிக்கையாகும்.

பிபா அங்கீகாரம் கொண்ட நடுவர் ஓர் இறுதியாட்டத்தில் இத்தகைய தவறுகள் செய்யக்கூடாது. அதுமட்டுமின்றி, அச்சம்பவத்தை காணும் பொழுது அங்கு எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை.

அப்படி யென்றால், நடுவர் தவறுதலாக விசிலை ஊதி தவறு என்று பகாங் ஆட்டக்காரருக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை வழங்கியது மிகவும் ஏற்புடையதல்ல.

உங்களின் தேவையான குழு வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு சாதகமாக மலேசிய காற்பந்து நடுவர்கள் செயல்படுவதை இன்று காணமுடிந்ததை கண்டு மலேசிய காற்பந்து சங்கத்தின் நடுவர் இலாகா மிகவும் கேவலமாக செயல்படுவதை உறுதி்செய்ய முடிகிறது.

முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தபோது ஜே டி தி விளையாட்டாளர்கள் நடுவரை முற்றுகையிட்டனர். குறிப்பாக காற்பந்து விளையாட்டின் இறுதியாட்டத்தை நடுவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் விளையாட்டை வைத்துக்கொண்டு சிறப்பாக வழிநடத்துவார்கள். ஆனால், இந்த நடுவர் ஆட்டம் தொடங்கியது முதல் 25 வது நிமிடம் வரை தடுமாற்றத்துடன் செயல்பட்டார். அதற்கு பின்பும் சுமாராக செயல்பட்டதை காண முடிந்தது எனலாம்.

இனிவரும் காலங்களில் மலேசிய காற்பந்து சங்கம் அவர்களுக்கு தேவையான குழுவிற்கு விளையாடமலேயே மலேசிய கிண்ணம், எப்.ஏ.கிண்ணம், லீகா சூப்பர் கிண்ணத்தை வழங்கி விடலாமே. ஏன் இதற்கு போட்டியை நடத்த வேண்டும். இதனால்தான், மலேசிய காற்பந்து இரசிகர்கள் அந்நிய நாட்டு காற்பந்து விளையாட்டிற்கு தங்கள் ஆதரவை வழங்கி வருவதை மலேசிய காற்பந்து சங்கம் உணருதல் அவசியமாகும்.

அடுத்தக்கட்டமாக, இரண்டாம் பாதி ஆட்டத்தில் பல தொடர் முயற்சிகளை ஜே.டி.தி குழுவினர் செய்த போதும் கோல் அடிக்க இயலவில்லை. இருப்பினும், பந்தை உதைக்க பகாங் தற்காப்பு ஆட்டக்காரர் முயன்ற போது பின்புறம் வந்த ஜே.டி.தி. முன்னணி காலை
நடுவில் விட்டார். இதனை தவறான சம்பவம் என்று கூறி நடுவர் பினால்டியை ஜே.டி.தி. க்கு வழங்கினார். ஒரு தரமான நடுவர் இதற்கு பினால்டி வழங்கியிருக்கமாட்டார்.

கொரிய நாட்டுக்காரர் தற்காப்பு விளையாட்டாளராக ஜே.டி.தி. அணிக்கு விளையாடினார். அவர் பல முறை தவறுகள் செய்தாலும் நடுவர் மஞ்சள் அட்டை வெளியாக்க தயக்கம் காட்டினார். இருப்பினும், பகாங் ஆட்டக்காரர்கள் வற்புறுத்தலுக்கிணங்க நடுவர் இந்த கொரிய ஆட்டுக்காரருக்கு இரண்டாம் மஞ்சள் அட்டையை வழங்கி வெளியேற்றினார்.

இறுதியில், பகாங் அணியின் பயிற்சியாளர் சிங்கப்பூர் பண்டி அமாட் நடுவர் பற்றிய கருத்தை பதிவிட மறுத்து விட்டார். நீங்கள் காற்பந்து இரசிகர்கள் நடுவரின் செயல் நடவடிக்கைகளை நேரடியாக பார்த்தீர்கள் என்று அவர் கோடிக்காட்டினார். இறுதியில்
ஆட்டம் 2 -1 என்ற கோல் கணக்கில் ஜே.டி.தி.க்கு சாதகமாக நடுவர் நிலைநிறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button