Malaysia

இந்நாட்டு இந்தியர்களுக்கு ஏஜென்சிகள் வாயிலாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன தம்பூன் தொகுதி இந்தியர்கள் உயர்கல்வி தொடர கல்வியுதவியை திறந்தவெளி பல்கலைக்கழகம் வழங்குகிறது

ஈப்போ, ஜுலை, 14- தம்புன் தொகுதி இந்தியர்கள் பிரதமராக வருவதற்கு பெரும் துணை புரிந்தவர்கள். அவர்கள் செய்த உதவிக்கு கைமாறாக இங்குள்ள 3 பெரிய கோவில்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

பிரதமர் இந்தியர் நலனுக்காக துணைபுரியவில்லை என்று ஒரு சில பொறுப்பற்றவர்கள் வதந்தியை உருவாக்கி வருகின்றனர். நான் அனைவருக்கும் பிரதமராக சேவையாற்றி வருகிறேன் என்று தம்புன் இந்திய சமூகத்தினரை சந்தித்த போது பிரதமர் கூறினார்.

இந்நாட்டு இந்திய மக்கள் நலன் கருதி மித்ரா, அமானா இக்தியார், தெக்கூன்,திவெட், பெட்ரோனாஸ் வாயிலாக உதவிகள் செய்து வருகிறோம். இந்த அரசாங்க ஏஜென்சிகள் வாயிலாக தொடர்ந்து உதவிகள் நல்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் தமிழ்மொழிக்கு எந்தவொரு தடையும் இல்லை. அதுபோலவே மற்ற மொழிகளுக்கும் எந்த தடையும் கிடையாது. அதிகமான மொழிகளை மக்கள் பயின்றால் அனைவருக்கும் நன்மையே. ஆகவே, அவரவர் மொழியை வளப்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் வரையறுத்து செயல்படும்படி அவர் வலியுறுத்தினார்.

பல இன மக்கள் வாழும் நாட்டை நிர்வகிப்பதில் அனைவரின் நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். இவற்றில் குழப்பத்தை உருவாக்கும் பொறுப்பற்றவர்கள், குடும்ப அரசியல் நடத்தும் சுயநலவாதிகள் ஆகியோர் மக்களை குழப்பி வருவதாக அவர் எச்சரித்தார்.

எஸ்.பி.எம். தேர்வில் 10 ஏ பெற்ற அனைத்து இன மாணவர்களுக்கும் மெட்ரிகுலேசனில் நிச்சியாக இடம் கிடைக்கும். அதற்கு குறைவாக கிடைத்தவர்கள் மனு செய்யலாம். ஆகவே, இவ்விவகாரம் குறித்து நன்கு அறிந்து பின் கருத்துரைக்க முன் வாருங்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர மாரியம்மன் ஆலயத்திற்கு 250,000.00 ரிங்கிட், ஜெலப்பாங் நடராஜர் ஆலயம் 142,000 ரிங்கிட்டும், மெருராயா ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கு 155,000 ரிங்கிட் மானியம் வழங்கினார் பிரதமர். சத்தியசீலா தமிழ்ப்பள்ளிக்கு பேருந்து நிதியுதவி, செல்லம்மாவுக்கு புதிய வீடு கட்டிதரப்பட்டுள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button