Malaysia

ஹரிசாந்தி சுபாநாகஸ்ரீ சிவநேஸ்வரர் பேராக் வளர்தமிழ்விழா வெற்றியாளர்கள். சுங்கை சிப்புட் தொகுதியில் 8 தமிழ்ப்பள்ளிகளுக்கு மின்னியல் வெண்பலகை வழங்கப்படும் எஸ். கேசவன் தகவல்

சுங்கை சிப்புட்,ஜுலை. 14-
பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான வளர்தமிழ் விழா இங்குள்ள ஈவூட் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

அதன் பரிசளிப்பு விழா மற்றும் நிறைவுவிழா பாலவன் மண்டபத்தில் நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியை பேராக் மாநில கல்விதுணைக்களம் மற்றும் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், உலு பேராக், கோலகங்சார் மாவட்ட தமிழ்ப்பள்ளிளுக்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் நன்றியையும், வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார்.

 

24ஆவது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டி சிறப்பாக நடந்தேறியதற்கு இந்நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன், இந்நிகழ்விற்காக 10,000 ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக எஸ்.கேசவன் தெரிவித்தார்.

இந்தப் மூன்று போட்டிகளில் முதல் இரு நிலை வெற்றியாளர்கள் பேராக் மாநிலத்தை பிரதிநிதித்து நெகிரி செம்பிலானில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விசயமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தாய்மொழி கல்வி இந்நாட்டில் படிக்க சட்டம் அனுமதி வழங்கியுள் ளது. தேசிய மொழி கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் , தாய்மொழி கல்விக்கு முக்கியதுவம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்மொழி மற்றும் சீன மொழி பள்ளிகளும் இந்நாட்டில் சிறப்பாக இயங்கி வருவதை நாம் காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது என்று அவர் கருத்துரைத்தார்.

மாணவர்களின் படைப்பு மிகவும் சிறப்பாக இருந்ததோடு பொற்றோர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. முனைவர் சாமிக்கண்ணு ஜெயமணி உருவாக்கிய இந்த வளர்தமிழ் விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டும். அதற்கேற்ப பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி யில் ஹரிசாந்தி ராஜன் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி, சுபாநாகஸ்ரீ நாகராஜன் பேச்சுப்போட்டி, சிவநேஸ்வரர் சதிஸ் கவிதைப் போட்டியில் வெற்றி வாகை சூடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button