Malaysia

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுகிறது அதனை தவறாக சித்தரிக்க வேண்டாம் டத்தோ ரமணன் எச்சரிக்கை

தேசம் செய்திகள் குணாளன் மணியம் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், ஜூன் 5- 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதால் யாரும் அதனை தவறாக சித்தரிகக்கூடாது என்று தொழில் முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் வலியுறுத்தியுள்ளார்.

இத்திட்டங்கள் அனைத்தும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவே அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் இத்திட்டங்கள் குறித்து ஒரு சிலர் தவறான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். இது தவறான சிந்தனை என்று டத்தோ ரமணன் கூறினார்.

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் தெக்குன் கோஸ் பிக் வாயிலாக 30 மில்லியன், அமானா இக்தியாரின் பெண் திட்டம் வாயிலாக 50 மில்லியன் ஒதுக்கப்பட்டது. தற்போது புதியதாக பேங்க் ரக்யாட்டின் BRIEF-i திட்டத்தின் வாயிலாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கண் துடைப்பு. விண்ணப்பித்தால் கிடைக்காது என பல கருத்துக்களை பரப்புகின்றனர்.
இதனால் அரசாங்கத்தின் இத்திட்டங்கள் குறித்து தவறான சிந்தனை ஏற்படுகிறது. ஆகையால், இதுபோன்ற நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களும் நிச்சயமாக இந்திய சமுதாயத்திற்கு பயனளிக்கும். இந்த திட்டங்களை யாரும் தவறான பார்வையுடன் பார்க்க வேண்டாம் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button