
இந்திய சமுதாயம் ஒன்றுபட்ட சமுதாயமாக உருமாற வேண்டும் தேவைகளை உரிமையோடு பெற வேண்டும் மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ தனேந்திரன் வலியுறுத்து கெடா மாநில தேசம் செய்தியாளர் மகேந்திரன்
சுங்கைப்பட்டாணி,ஆக.6-
இந்திய சமுதாயத்திற்கான தேவைகளை உரிமையோடு பெறுவதற்கு இந்திய சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்று மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சமுதாயம் இன்று பல நிலைகளில் பிளவுபட்டுக் கிடக்கிறது. இந்நிலை மாற வேண்டும். நமக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றால் சமுதாயத்தின் ஒற்றுமை மிகவும் அவசியம். இந்த ஒற்றுமைதான் நமக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று சுங்கைப்பட்டாணி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற கெடா மாநில மக்கள் சக்தி பேராளர் மாநாட்டில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ தனேந்திரன் அவ்வாறு கூறினார்.
இந்திய சமுதாயத்தின் இந்த ஒற்றுமை கண்டிப்பாக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும். மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள். இந்திய சமுதாயத்தின் கோரிக்கைக்கு அரசாங்கம செவிசாய்க்கும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இந்திய சமுதாயத்தில் ஏற்பட்ட பிளவுகள் நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்து.
இதனால் ஏற்பட்டிருந்த நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பாதிப்புகளைய மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளதால் இனியும் தாமதிக்காமல் ஒன்றுபட்ட சமுதாயமாக உருமாறுங்கள். நமது உரிமைகளை பெறுவதற்கு நாம் மீண்டும் போராட வேண்டிய நிலை உருவாகக் கூடாது
என்று டத்தோஶ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் தெளிவுபடுத்தினார்.
இந்திய சமுமாய மக்கள் நம் முன்னோர்களின் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் அது அழிந்து விடக்கூடிய நிலை உருவாகலாம்.
ஆகையால், நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.



