Malaysia

நஜீப்பிற்கு நியாயம் கிடைக்கும் வரையில் மக்கள் சக்தி கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் சூளுரை

கெடா மாநில தேசம் செய்தியாளர் மகேந்திரன்

சுங்கை பட்டாணி,ஆக.6-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பக்கம் நின்று நியாயம் கிடைக்கும் வரையில் மக்கள் சக்தி கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் சூளுரைத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் வழக்கில் மக்கள் சக்தி கட்சி அவருக்கு உறுதுணையாக துணை நின்றது. டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு நியாயம் கிடைக்கும் வரையில் மக்கள் சக்தி கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று சுங்கைப்பட்டாணி காந்தி மண்டபத்தில் நடைப்பெற்ற மக்கள் சக்தி கட்சியின் கெடா மாநில ஆண்டு கூட்டத்தில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் அவ்வாறு உறுதியளித்தார்.

கெடா மாநில மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ சண்முகம், மாநில செயலாளர் நாகேந்திரன் ஆகியோரும் கூட்டத்தில் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த ஆண்டு கூட்டத்தில் டத்தோஸ்ரீ தனேந்திரன் மற்றும் குகனேஸ்வரன் ஆகியோர் சுங்கை பட்டாணி வட்டாரத்தில் அமைந்துள்ள சில ஆலயங்களுக்கு மானியம் வழங்கினர்.

மக்கள் கட்சி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ் தனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உதவித் தலைவர் குகனேஸ்வரன், மணிவண்ணன், மகளிர் அணி தலைவி ஜெயலெட்சுமி, டத்தின் வாணிஸ்ரீ உட்பட ம.இ.கா, கிம்மா, ஐபிஎப், கெடா மாநில தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள் மற்றும் கோவில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button