Malaysia

சிகோ மரடோனா காற்பந்து சங்கத்தின் நட்புறவு காற்பந்து போட்டி விளையாட்டு ஜூன் 14 ஆம் தேதி நடைபெறுகிறது சிகோ அப்பளநாயுடு தகவல்

 

ஈப்போ,மே 9-

உலக காற்பந்து துறையில் ஜம்பவான்களாக இருந்த சிகோ மற்றும் மரடோனா ஆகிய இருவரையும் நினைவுப் படுத்தி அமைக்கப்பட்ட மலேசியா சிகோ மரடோனா காற்பந்து சங்கத்தின் நட்புறவு காற்பந்து போட்டி விளையாட்டு வரும் ஜூன் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது என சிகோ மரடோனா காற்பந்து சங்கத்தின் தோற்றுநர் சிகோ அப்பளநாயுடு கூறினார்.

இந்த போட்டி ஈப்போ பி.சி.ஆர்.சி திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்த சங்கம் தொடங்கப்பட்டு இப்பொழுது சிறப்பாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சுங்கை சிபாபுட்டை சேர்ந்த நானும் அபாங் சுல் என்பவரும் தொடங்கினோம். இந்த அணிக்கு எட்டு பேர் தோற்றூநர்கள் உள்ளனர். இந்த அணியில் 37 விளையாட்டாளர்கள் உள்ளனர்.

தொடக்கத்திலிருந்து பலர் இந்த அணிக்கு ஆதரவாக இருந்த தோற்றுநர்களை நாங்கள் நினைவுறுத்துகிறோம்.

முதல் தோற்றுநர் தெலுக் இந்தான் தேவன் கோலேக்ஷன் , ஆர்.குமரவேல், வாரிசான் மாஜூ குலோபல் பினாங்கு, ஶ்ரீ சங்கர், கிள்ளான் ஹேவிகன் லோஜிஸ்திக் கே.முருகன், வி.எஸ்.லோஜிஸ்திக் எண்ட் ஷிப்பிங், டத்தோ டாக்டர் விஸ்வநாதன் , சுங்கை சிப்புட் பிரவினா எண்டர்பிரைஸ், வி.மனோ , டி.எக்ஸன் மலேசியா செண்டிரியான் பெர்ஷாட் , சாமிநாதன், இந்தோனிசியா, மேடான், ஏ.எஸ்.கே.எஸ்.மேடான் இநந்தோனிசியா ஆகியோர் இந்த‌ அணிக்கு ஆதரவாக உள்ளனர்.

 

இந்த அணி சிறப்பாக செயல்படுதவற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் விளையாட்டாளர்களுக்கும் நன்றி கூற‌ கடமைப்பட்டுள்ளோம்.

இந்த‌ போட்டி நடைப்பெறுவதை முன்னிட்டு காற்பந்து ஆர்வலர்கள் வந்து பார்க்கலாம்.

இப்போட்டியில் சிகோ‌ மரடோனா அணியுடன் கே.எல். வேத்தரன்‌ 93 அணியுடன் மோதுகின்றனர்.

மேலும், இந்த சிகோ மரடோனா அணியின் ஆலோசகராக குமார் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button