
வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் டத்தோ சிவக்குமார் நடராஜா வலியுறுத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,ஆக.14-
வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது தொடர்பில் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டது போல் அங்குள்ள இந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று DSK இயக்கத் தலைவர் டத்தோ சிவக்குமார் நடராஜா வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை வரவேற்ற டத்தோ சிவக்குமார் இது தொடர்பில் மலேசிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
வங்காளதேசத்தில் இந்துக்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பில் பிரதமர் தமது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும். அங்குள்ள இந்துகள் மீதும் மலேசியப் பிரதமர் அக்கறை காட்ட வேண்டும் என்று
டத்தோ சிவக்குமார் கூறியுள்ளார்.
வங்காளதேசத்தில் நடந்த கலவரத்தில் 300க்கும் அதிகமான இந்துக்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மலேசிய இந்துகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பிரதமர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மலேசியாவில் வசிக்கும் பல லட்சம் வங்காளதேசிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமென டத்தோ சிவக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
வங்காளதேசத்தில் உள்ள இந்துகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் மூவினத்தையும் பிரதிநிதிக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இது தொடர்பில் கன்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.



