
செர்டாங் மருத்துவமனை ஸ்ரீ மகா சிவகாளியம்மன் ஆலயத் திருவிழா ஆகஸ்டு 18இல் நடைபெறும் பக்தர்கள் கலந்து கொள்ள ஆலய நிர்வாகம் அழைப்பு
செர்டாங்,ஆக.16-
காஜாங்-பூச்சோங் நெடுஞ்சாலை 6ஆவது மைல் செர்டாங் மருத்துவமனை அருகில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா சிவகாளியம்மன் ஆலயத்தின் 36ஆம் ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்டு 18ஆம் தேதி காலை தொடங்கி மிகவும் கோலாகலமாக நடைபெறவிருப்பதால் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 14ஆம் தேதி கொடியேற்ற வைபவத்துடன் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் தொடங்கி ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருவிழாவின் முதல்நாளாள ஆகஸ்டு 17 சனிக்கிழமை காலை தொடங்கி பல்வேறு பூஜை, புனஸ்காரங்கள் நடைபெறும். மாலை 5 மணிக்கு பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு கரகம் பாலித்தல் வைபவம் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செர்டாங் மருத்துவமனை ஸ்ரீ மகா சிவகாளியம்மன் ஆலயத்தில் திருவிழா அன்று அதாவது ஆகஸ்டு 18 காலை 8 மணி தொடங்கி சிறப்பு ஹோமம், பூஜைகள், அபிஷகேம் ஆராதனைகள் நடைபெறும். அதன்பிறகு பக்தர்களுக்கு காப்பு கட்டி பால்குடம் ஏந்தும் வைபவம் நடைபெறும். தொடர்ந்மு மகேஸ்வர பூஜைக்குப் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று ஆலய நிர்வாகம் கூறியது.
இத்திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு ஆலயத்தில் நித்திய பூஜை நடைபெறும். அதன்பிறகு வசந்த மண்டப பூஜை நடைபெறும். தொடர்ந்து அம்பாள் உள்வீதி உலாவந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு மருநாள் காலை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மஞ்சள் அபிஷேகம் நடைபெறும். மாலையில் சிறப்பு பூஜை, வசந்த மண்டப பூஜை, பொன்னுஞ்சல் வைபவத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டு திருவிழா இனிதே முடிவுறும் என்று ஆலய குருக்கள் சிவஸ்ரீ சிவா குருக்கள் தெரிவித்தார்.

செர்டாங் சிவகாளியம்மன் ஆலயம் பக்தர்கள் மத்தியில் நன்கு பிரசித்துப் பெற்ற ஆலயமாகும் என்பதால் ஆலயத்திற்கு நிதியுதவி, பொருள் உதவி வழங்க விரும்பும் பக்தர்கள் சிவஸ்ரீ சிவானந்தன் சிவாச்சாரியார் அவர்களுடன் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 016-3707877



