
Malaysia
பெர்சத்து பத்துகாஜா தொகுதி இலக்கு. இந்தியர்களை உறுப்பினராக்கு களம்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, செப்-3
மலாய்க்காரர் , சீனர்கள் தற்சமயம்
பெர்சத்து பத்துகாஜா தொகுதியில்
உறுப்பினர்களாக
இருப்பதாகவும் இந்தியர்களின்
பங்கு இல்லை என
அதன் முன்னாள் தொகுதி செயலாளர்
ஹம்சா முகமட் நோர் தகவலை
வெளியிட்டார்.
இந்தியர்களின் அங்கத்துவம் இல்லை என்ற
உண்மையை வெளியிட்ட அவர்
எந்த காரணத்திற்க்கும்
இந்தியர்கள் விடுபடாமல்
இருக்க புதிய வியூகம் இருப்பதாக
சொன்னார்.
இந்தியர்களை உறுப்பினராக்க
பிரச்சாரத்தில் இறங்கப் போவதாக
கூறிய அவர் இந்திய
இளைஞர்களை
அதிகம் சேர்க்க
விருப்பம் கொண்டுள்ளதாக
தெரிவித்தார்.



