
Malaysia
SHAH ALAM IDCC CONVENTION CENTRE மாநாட்டு மண்டபத்தில் ம.இ.காவின் 78ஆம் ஆண்டு பேராளர் மாநாடு தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்-டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் நடைபெறும்
ஷா ஆலம்,செப்.15-
ம.இ.காவின் 78ஆவது பேராளர் மாநாடு செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு
SHAH ALAM
IDCC CONVENTION CENTRE மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவி தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், பேராளர்கள் என்று சுமார் இரண்டாயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

இந்த பேராளர் மாநாட்டிற்கு துணைப் பிரதமரும் தேசிய முன்னனி தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, தேசிய முன்னனி உறுப்புக்கட்சிகளின் தலைவர்கள், சிறப்பு பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருப்பதால்
இப்பேராளர் மாநாட்டில் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்கும்படி
ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் எல்.சிவசுப்ரமணியம் அன்புடன் அழைக்கின்றார்.



