
மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றியானது தேசிய முன்னணிக்கு மீண்டும் ஆதரவு பெருகியுள்ளது
கோலாலம்பூர் செப் 29-
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெற்ற அமோக வெற்றி மீண்டும் மக்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு கிடைத்துள்ளது என்று தேதிய முன்னணி செயலாளர் டத்தோஸ்ரீ ஸம்ரி கூறினார்.
மக்கோத்தா இடைத்தேர்தலில் 54 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்துள்ள வேளையில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி ஒரு சரித்திரம் என மக்கள் சக்தி கட்சியின் 16ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த தருணத்தில்
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக இந்திய சமுதாயத்திற்கு முக்கியதுவம் அளித்துடன் சமுயாத மேம்பாட்டு திட்டவரைவுகளை முன்னெடுத்தார் என்பது உண்மை. இந்திய சமுயாத்திற்கு மட்டுமின்றி அனைவருக்கும் சிறந்த சேவையை அவர்
வழங்கினார்.
இதனிடையே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எப்போதும் வழங்கக் கூடாது என்று டத்தோஸ்ரீ நஜிப் கூறியதை இன்றும் நினைத்து பார்க்கிறேன்.
பல அவதூறுகள், அன்றைய எதிர்க்கட்சியின் போலி வாக்குறுதிகளே மக்கள் மத்தியில் தேசிய முன்னணி மீதான நம்பிக்கை குறைந்ததற்கு காரணம் என அவர் சொன்னார்.
ஆனால் இப்போது மக்கோத்தா இடைத்தேர்தல் முடிவு மக்கள் மத்தியில் தேசிய முன்னணி மீண்டும் இடம்பிடித்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது என்று அவர் சொன்னார்.



