Malaysia

அலுவலகப் பையனாக ம.இ.காவில் நுழைந்த எங்கள் சரவணன் இன்று பார் போற்றும் சரவணனாக திகழ்கிறார்

கோலாலம்பூர்,டிச.2-
தமிழுக்கு தொண்டாற்றி தமிழ் இலக்கியம் பேசும் மலேசிய அரசியல் ஆளுமை எங்கள் சரவணன்…
தமிழும் சமயமும் இரு கண்கள் என்று போற்றும் செந்தமிழ் சுடர் சொல்வேந்தர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களுக்கு மல்லை தமிழ் சங்கத்தின் பெருந்தமிழன் ராஜராஜன் விருது…
தமிழ் மணம் கமழும் தமிழகத்தில் சிறந்த அயலகத் தலைவராக பார்க்கப்படும் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களுக்கு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழுக்கும் தமிழ் சமுதாய மேம்பாட்டிற்கும் ஆற்றிய தொண்டை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரங்களில் கனியம் பூங்குன்றனார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் எங்கள் தலைவனுக்கு சரியான தருணத்தில்
பெருந்தமிழன் ராஜராஜன் விருது…
பூங்குன்றனார் விருது…
இவ்விரு விருதுகளும் உங்களுக்கு மகுடம் சூட்டியுள்ளது.
இந்த உயரத்தை நீங்கள் எளிதில் அடைந்து விட்டீர்களா என்ன?
இல்லை…இல்லை…
இதற்காக நீங்கள் போட்ட உழைப்பு கொஞ்சமல்ல…நஞ்சமல்ல…

இந்த சரவணன் வரலாறு தெரியுமா உங்களுக்கு…புரட்டிப் பார்ப்போம்…வாருங்கள்…
அலுவலகப் பையனாக ம.இ.காவில் நுழைந்து ஹோஸ்பிட்டல் குவாட்ரஸ் பகுதியில் வளர்ந்தவர்…1994இல் தித்திவங்சா ம.இ.காவில் சேர்ந்து செயலாளர் ஆகி படிப்படியாக உயர்ந்தவர். தமிழ்மொழியில் இவருக்கு இருந்த ஆளுமை இவரை கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவரானார்…
செனட்டரானார்…
நாடாளுமன்ற செயலாளர் ஆனார்…
துணையமைச்சர் ஆனார்…
அமைச்சர் ஆனார்…
இவையெல்லாம் ஓரிரவில் நடக்கவில்லை…
பல இரவுகள் சரவணன் என்ற ஆளுமை கண்விழித்து உழைத்ததன் பலன்…

மலேசிய நாட்டின் சிறந்த ஆளுமையாளராக தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் மலேசியாவின் முன்னாள் மனிதவள அமைச்சரான டத்தோஶ்ரீ டாக்டர் சரவணன் பெருந்தமிழன் ராஜ ராஜனாக வலம் வருகிறார்.

மலேசிய நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி மஇகா. அதன் தேசிய துணைத் தலைவராக இருக்கும் சரவணன் இளம் வயதிலேயே மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தொடர்ச்சியாக ஐந்து முறை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். கூட்டரசு பிரதேச துணை அமைச்சர், இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் மனிதவள அமைச்சர் என்று அப்பதவிகளுக்கு பெருமை சேர்த்த
டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button