
தேசிய வகை ஹீவுட் தமிழ்ப்பள்ளிக்கு தேசிய வகை துன் எஸ். சாமிவேலு பெயர் பரிந்துரை
தேசம் செய்திகள் சாரா
சுங்கை சிப்புட், அக்-3
தேசிய வகை ஹீவூட் தமிழ்ப்பள்ளிக்கு
தேசிய வகை துன் எஸ்.சாமிவேலு அவர்களின் பெயரை சூட்ட இம் மானிலத்தின் வாழும் மக்கள் எதிர்ப்பார்பு முன் வைக்கையில் அதற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம்
அவர்கள் அதனை
நிறைவேற்றுவார் என பெரிதும் எதிர்ப்பார்த்திருப்பதாக சமூக, அரசியல்
ஆய்வாளர் டத்தோ எம்.பெரியசாமி
தெரிவித்தார்

ஆக்டோபர் 6 ஆம் தேதி பள்ளி புதிய
கட்டிடத்தை திறந்து
வைக்கவுள்ள நாட்டின் பிரதமர்
அவர்கள் மக்களின் எதிர்ப்பார்பை நிறைவேற்றுவார் என தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு தந்தைதந்தை என
வர்ணிக்கப்படும் அமரர் துன் எஸ்.சாமிவேலு
தனது சொந்த சுங்கை சிப்புட் நாடாளமன்ற தொகுதியில்
24 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக
இருந்து தமிழ்ப்பள்ளி தொண்டாற்றி அதன்.மேம்பாட்டிற்க்கு அளப்பறிய சேவையை வழங்கியுருப்பது நாடே அறிந்த உண்மையாகும் என்றார்.



