Malaysia

பேராக் மாநில மஇகா பொறுப்பாளர்கள் யார்?பட்டியல் விரைவில் வெளியிடப்படும் தான்ஸ்ரீ இராமசாமி தகவல்

ஈப்போ,அக்.7-
பேராக் மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டது முதல் ம.இ.காவினலிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக அதன் தலைவர் தான்ஸ்ரீ எம்.இராமசாமி கூறினார்.

இம்மாநிலத்தில் உள்ள கிளை தலைவர்கள், கிளைகளின் பொறுப்பாளர்களுடன் தொகுதி நிலையில் சந்திப்பு நடத்தி வரும் நிலையில் அவர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக தான்ஸ்ரீ இராமசாமி தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கிளைத் தலைவரகள் மற்றும் பொறுப்பாளர்கள் நல்ல ஆதரவை வழங்கி வருகிறார்கள். கட்சியை மேலும் வலுப்படுத்த இனைஞர்கள மற்றும் மகளிர்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது.

இந்த நாட்டு இந்தியர்கள் எதிர் நோக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மஇகா எப்போதும் தயாராக உள்ளது. மஇகாவில் இளைஞர்கள் பலர் இணைய ஆர்வம் கொண்டுள்ளனர் என்ற தான்ஸ்ரீ இராமசாமி சொன்னார்.

இந்நிலையில் பேராக் மாநில மஇகா பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தம்மை நடந்து முடிந்த மாநில மஇகா மாநாடில் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப பட்டதைத் தொடர்ந்து மாநில செயலாளராக புக்கிட் கந்தாங் தொகுதி காங்கிரஸ் தலைவர் ஜி. சண்முகவேல் நியமனம் செய்யப்பட்டதாக தான்ஸ்ரீ இராமசாமி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button