Malaysia

இந்திய வணிகர்களுக்கு 30 மில்லியன் ரிங்கிட் தெக்குன் கடனுதவி ஒதுக்கப்பட்டுள்ளது

இந்திய வணிகர்களுக்கு 30 மில்லியன் ரிங்கிட் தெக்குன் கடனுதவி ஒதுக்கப்பட்டுள்ளது

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தகவல்

கோலாலம்பூர்:
இவ்வாண்டு இந்திய வணிகர்களுக்கு 30 மில்லியன் ரிங்கிட் தெக்குன் கடனுதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன்
கூறியுள்ளார்.

“அந்நிதி போதாததால் 10 மில்லியன் ஒருமுறையும் மேலும் 9 மில்லியன் என மொத்தம் 49 மில்லியன் ரிங்கிட் கடனுதவி இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் பயனடைந்துள்ளனர் என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.

தெக்குன் கடனுதவிகள் இந்திய வணிகர்களுக்கு கிடைக்கவில்லை. அக் கடனுதவி என்னவானது என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்தன.

இந்நிலையில் புதிய துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ரமணன் தெக்குன் தலைமையகத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற விளக்கக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் மேற்கண்ட தகவலை வழங்கினார்.

கடந்த காலங்களில் தெக்குன் கடனுதவிக்கு விண்ணப்பிக்க 17 ஆவணங்கள் தேவை.
ஆனால் இப்போது அடையாள அட்டை உட்பட 4 ஆவணங்கள் மட்டுமே தெக்குன் கடனுதவிக்கு போதுமானதாக உள்ளது. ஆகவே வரும் காலங்களில் தெக்குன் இன்னும் அதிகமான வணிகர்களுக்கு கைகொடுக்க உறுதிப் பூண்டுள்ளது என்று டத்தோ ரமணன் கூறினார்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் தந்துள்ள இந்த விளக்கம் இந்தியர்களுக்கு தெக்குன் கடனுதவி கிடைக்கவில்லை என்பது பொய்யாகியுள்ளது.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் தெக்குன் வாயிலாக சிறுதொழில் வணிகர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தெக்குன் வாயிலாக கடனுதவி வழங்குவதற்காக அந்நிதி ஒதுக்கப்பட்டது.

டத்தோ ரமணன் தந்த விளக்கத்தின் வாயிலாக தெக்குன் கடனுதவி இந்திய சமுதாயத்திற்கு கிடைக்கவில்லை என்ற கூற்று பொய்யாகி உள்ளது என்று கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button