Malaysia

லம்போர் கீரி தேசிய ஆரம்பப் பள்ளியின் சங்கிலி தொடர் பிரச்சனை

தேசம் செய்திகள் சாரா

பாரிட், அக்.20 –
போத்தாவிலுள்ள
லம்போர் கீரி
தேசிய ஆரம்ப இடை நிலைப்பள்ளி
வெள்ள பிரச்னை சூழ்ந்து சங்கிலி தொடர் போல் பிரச்னை தீராமல்
இருப்பது பெறறோர்களிடத்தில் சஞ்சலத்தை
உண்டு பண்ணியுள்ளது.

பள்ளியின் உட்புற கால்வாய் முழுமையின்றி இருப்பதும் பராமறிப்பு இல்லாமல் தொடர்ந்து இருக்க
வெள்ளம் தங்கி விடுவதாக பேராக்
கல்வி,உயர் கல்வி, மற்றும் இளைஞர் விளையாட்டு துறை ஆட்சி மன்ற
உறுப்பினர் கைரூடின் அபு ஹானிப்பா சொன்னார்.

இப்பள்ளியானது முன்னாள் நெல் வயல் நிலத்தில் அமைய பெற்றுள்ளது.அதோடு செம்பண்ணை தோட்டம் அருகில்
இருக்க அங்கிருந்து வெள்ளம் பெருக்கெடுத்து பள்ளியில் தஞ்சமடைவதாக
அவருக்கு கிடைத்த
தகவலை வெளியிட்டார்.

எது எப்படியிருப்பின்
இதற்கு பரிகாரம்
காண உரிய அரசாங்க இலாகாக்களுடன் சந்திப்பு நடத்த போவதாக சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button