Malaysia

பிரிவ்-ஐ திட்டம் 384 இந்திய தொழில் முனைவோருக்கு 33.17 மில்லியன் நான்கு மாதங்களில் பேங்க் ரக்யாட் சாதனை

கோலாலம்பூர் அக்.21-
பேங்க் ரக்யாட் அறிமுகம் செய்துள்ள பிரிவ்-ஐ திட்டத்தின் வழி இந்திய தொழில் முனைவோருக்கு 33.17 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டிருப்பதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் கூறினார்.

நாட்டில் இருக்கும் இந்திய தொழில் முனைவோருக்கு உதவும் வகையில்
பேங்க் ரக்யாட் பிரிவ்-ஐ திட்டத்தை ஐந்து கோடி வெள்ளி மூலதனத்தில் தொடங்கியது.

இந்த திட்டத்தின்
வாயிலாக கடந்த நான்கு மாதங்களில் 384 இந்திய தொழில் முனைவோருக்கு 33.17 மில்லியன் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் 1,412 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் இவ்வாண்டு அக்டோபர் 14 ஆம் தேதி வரை 384 இந்திய தொழில் முனைவோர் நன்மை அடைந்து உள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஆதரவுடன், அதிகமான தொழில் முனைவோர் சவால்களை சமாளித்து அதிக வெற்றியை அடைய முடியும் நம்புகிறேன். BRIEF-i திட்டம் தொழில் முனைவோர் துறையில் அதிக வெற்றிக்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என்று நம்புவதாக டத்தோஸ்ரீ ரமணன் சொன்னார்.

உங்கள் வெற்றி தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, சமூகத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்த வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள் என பேங்க் ரக்யாட் வங்கியின் துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் இந்திய தொழில் முனைவோருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை ஏற்ற போது டத்தோஸ்ரீ ரமணன் அவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த
பிரிப்–ஐ, தெக்குன் போன்ற அறிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் தொழிலை மேம்படுத்தி கொள்ளுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button