Malaysia

2014 ஆண்டில் ஏற்ப்பட்ட வெள்ளத்தை விட இவ்வாண்டு மோசமாக உருவெடுத்துள்ளது.

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ, அக்.22-
பேராக் மாநிலத்தில் 2014 ஆண்டுகளில் ஏற்ப்பட்ட வெள்ள பேரிடரை ஒப்பிடுகையில் இவ்வாண்டு நிகழ்ந்த பேரிடர் மோசமானது என பேராக் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஷாரணி முகமட் ஒப்பிட்டு பேசினார்.

விசித்திரமான வெள்ள பேரிடர் இது வாகும்.பழைய இடங்களில்தான் வெள்ளம் ஏற்ப்படும் என நினைக்கையில்
அதற்கு.மாறாக எதிர்ப்பார்க்காத புதிய இடங்களில்
வெள்ளம் ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கின்றது என்றார்.

2014 ஆண்டில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் 1,972 குடும்பங்களை சேர்ந்த 7,587 பேர் பாதிப்புக்குள்ளாக
இவ்வாண்டு இரு மடங்கு அதிகரித்துள்ளதாக சொன்னார்.

பெரும்பாலானோர் ஹிலிர் பேராக், பேராக் தெங்கா, கிரியான் ,கோலகங்சார் மாவட்டங்களில் சேர்ந்தவர்கள் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button