Malaysia

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா-இரத ஊர்வலம் பக்தர்கள் கலந்து கொள்ள கோலாலம்பூர்

கோலாலம்பூர், பிப்.24-

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம் ஆலயத்தில் நடைபெறும் மாசிமகத் திருவிழா மற்றும் இரத ஊர்வலத்தில்
பக்தர்கள் கலந்து கொள்ள தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் மாசிமகத் திருவிழா பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு இரத ஊர்வலம் நடைபெறவுள்ளது.

இந்த இரத ஊர்வலம் பத்துமலை திருத்தலத்தில் இருந்து தொடங்கும். பிப்ரவரி 24 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பத்துமலை திருத்தல சுவாமி மண்டபத்தில் இருந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ கணேசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் இரதத்தில் எழுந்தருளி கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் நோக்கி புறப்படுவார்கள் என்று தான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

இந்த இரத ஊர்வலம் பத்துகேவ்ஸ், MRR 2, jalan Sri Batu Caves, Jalan Sentul, Jalan Ipoh, Jalan Tunku Abdul Rahman, Leboh Pasar வழியாக Jalan Tun H.S.Leeயில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் வந்தடையும் என்று தான்ஸ்ரீ நடராஜா சொன்னார்.

இந்த மாசிமகத் திருவிழா மற்றும் இரத ஊர்வலத்தில் பக்தர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளும்படி உபயநாட்டமையும் அறங்காவலருமான தான்ஸ்ரீ ஆர்.நடராஜா, உபய பிரதிநிகளான டத்தோ கு.செல்வராஜூ, திரு.டி.ராஜ்குமார் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button