Malaysia

அம்பாங் ஆரம்ப பள்ளியில் இந்திய மாணவன் வெய்யிலில் நிறுத்தப்பட்டு கோமா ஆன விவகாரம் பள்ளி நிர்வாகமும் போலீசாரும் மூடி மறைக்க முயல்கிறார்களா? நடவடிக்கை எடுக்காதது ஏன்? தயாளன் ஸ்ரீ பாலன், வழக்கறிஞர் தினேஷ் கேள்வி

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன், ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், மே 29-
அம்பாங் வட்டாரத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் இந்திய மாணவர் ஒருவர் வெய்யிலில் நிறுத்தப்பட்டு் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் அரசு சாரா இயக்கத்தின் தலைவர் தயாளன் ஸ்ரீ பாலன் மற்றும் வழக்கறிஞர் தினேஷ் இருவரும் நங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த 11 வயது மாணவர் குணசேகரன் சுரேஷ் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி Ampang Campuran ஆரம்ப பள்ளியில் சகமாணவர்கள் மூவர் தண்ணீர் போத்தலை விட்டு வீசியது தொடர்பில் கணக்கு பாட ஆசிரியரிடம் புகார் செய்த நிலையில் சம்பந்தப்பட்ட கணக்கு ஆசிரியர் மற்ற மூன்று மாணவர்களை 10 நிமிடம் வெய்யிலில் நிறுத்தி விட்டு விடுவித்த நிலையில் சம்பந்தப்பட்ட இந்திய மாணவனை மட்டும் காலை 10 மணி தொடங்கி நண்பகல் 12.
50 மணிவரையில் வெய்யிலில் நிறுத்தியதாக தயாளன் ஸ்ரீ பாலன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் அம்மாணவரின் தாயார் மோகன செல்வி (வயது 34) கடந்த ஏப்ரல் 30ஆம் காவல்துறையில் புகார் செய்துள்ளார். ஆனால், அம்பாங் ஜெயா காவல்துறை தலைவர் அஸாம் இஸ்மாயில் விசாரணை முடிந்து விட்டதாக ஊடகத்துக்கு வழங்கிய செய்தியில் கூறினார்.

இந்நிலையில் ஒரு மாதம் ஆகியும் இந்த விவகாரம் தொடர்பில்ப போலீசார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நல்ல நிலையில் இருந்த ஒரு மாணவனை OKU ஆக காரணமான சம்பந்தப்பட்ட கணிதபாட ஆசிரியர் ஒரு குற்னவாளியாக கருதப்படுகிறார். ஆனால், அந்த ஆசிரியர் அரசாங்க ஊழியர் என்பதால் அவரை கைது செய்ய முடியாது என்று போலீசார் கூறுகின்றனர். அதற்கான உரையாடல் ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தயாளன் ஸ்ரீ பாலன் சொன்னார்.

இந்த மாணவன் சொந்தமாக பேசிக் கொள்கிறான். பயந்த நிலையில் இருக்கிறான். கட்டிலுக்கு அடியில் புகுந்து கொள்கிறான். அதிக வெப்பத்தில் இருந்ததால் மூளை பாதித்து நரம்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் உறுதிபடுத்தியுள்ளார். பள்ளி நிர்வாகம் அல்லது காவல்துறை ஆகிய இருரப்பினரும் சம்பந்தப்பட்ட மாணவனை பார்க்கவே இல்லை. நலம் விசாரிக்கவில்லை. ஆனால்ல, பள்ளிக்கு ஏன் வரவில்லை என்று காரணம் தெரிந்திருந்தும் ஒரே நாளில் 5 நிமிட இடைவெளியில் எச்சரிக்கை கடிதம் வழங்கியிருப்பது வேடிக்கையாக இருப்பதாக தயாளன் ஸ்ரீ பாலன் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் நாம் மிகுந்த மன அழுத்திற்கு ஆனானேன். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த மகன் குணசேகரன் இன்று மாற்றுத்திறனாளி என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு வர அனுமதிக்கவில்லை. பள்ளி நிர்வாகமும் போலீசாரும் இதனை மூடி மறைக்கிகிறார்கள் என்று தாயார் மோகன செல்வி கூறினார்.

இந்த இந்திய மாணவர் குணசேகரன் விவகாரம் தொடர்பில் ஏன் இந்த இரட்டை கொள்கை? அரசாங்க ஊழியர் என்றால் கைது செய்யக்கூடாதா? பெட்ரோல் பங்கில் மெகி சமைத்தவர்கள் உடனடியான நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் போது ஒரு மாணவரை சித்திரவதை செய்த ஆசிரியர் இன்னமும் சுதந்திரமாக இருப்பது கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. நாங்கள் மானநஷ்ட வழக்கு போடுவது வேறு விஷயம். ஆனால், இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மோகன செல்வியின் வழக்கறிஞர் தினேஷ் கேள்வி எழுப்பினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button