Malaysia

Puchong பரிவுமிக்க ஒருமித்த இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் டத்தோ Dr ரவின் எஸ்.பிள்ளை மற்றும் ரமேஷ் கே.செல்வராஜூ இணைந்து நடத்தும் கால்பந்து போட்டி

கோலாலம்பூர்,நவ.2-
கால்பந்து துறையில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் Puchong பரிவுமிக்க ஒருமித்த இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் டத்தோ Dr ரவின் எஸ்.பிள்ளை மற்றும் ரமேஷ் கே.செல்வராஜூ இணைந்து நடத்தும் கால்பந்து போட்டி ஒன்று நவம்பர் 10ஆம் தேதி பண்டார் கின்றாரா பூச்சோங் BK2, BK3 திடலில் நடைபெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் டத்தோ ரவின் எஸ்.பிள்ளை கூறினார்.

இந்த கால்பந்து போட்டிக்காக கால்பந்து ஆர்வலர்கள் தங்கள் குழுக்களை பதிவு செய்யும் இறுதிநாள் நவம்பர் 8ஆம் தேதி என்பதால் போட்டியாளர்கள் அந்த நாளுக்குள் பதிவு செய்து கொள்ளும்படி டத்தோ ரவின் பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கால்பந்து போட்டியில் ஒரு குழுவில் 12 பேர் இடம்பெறுவார்கள். ஆகையால், ஒரு குழுவில் 12 பேர் மட்டுமே இருக்க முடியும். இதன் சாம்பியன் வெற்றியாளருக்கு 5 ஆயிரம் வெள்ளி ரொக்கம், வெற்றி கோப்பை, மெடல் வழங்கப்படும். இரண்டாம் நிலை வெற்றியாளர் குழுவுக்கு 2,500 வெள்ளி வெற்றி கோப்பை, மெடல் வழங்கப்படும். மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு 1,500 வெள்ளி ரொக்கம், வெற்றி கோப்பை, மெடல் வழங்கப்படும். நான்காம் நிலை வெற்றியாளருக்கு ஆயிரம் வெள்ளி, வெற்றி கோப்பை மற்றும் மெடல் வழங்கப்படும். அதேநேரத்தில் சிறந்த விளையாட்டாளருக்கு 300 வெள்ளியும் வெற்றி கோப்பையும் சிறந்த கோல் கீப்பருக்கு 300 வெள்ளி வெற்றி கோப்பையும் அதிக கோல் அடித்த விளையாட்டாளருக்கு 300 வெள்ளி மற்றும் வெற்றி கோப்பை, பரிசாக வழங்கப்படும் என்று டத்தோ ரவின் பிள்ளை தெரிவித்தார்.

இந்த போட்டியை pertubuhan Kebajikan Reds Pipit சார்பில் டத்தோ ரவின் பிள்ளை நடத்துகிறார். இந்த கால்பந்து போட்டி வெற்றியுடன் நடைபெற சுபாங் தொகுதி ம.இ.கா தலைவர் டி.ஜெகதீஸ்வரன், சுபாங் தொகுதி ம.இ.கா துணைத்தலைவர் டத்தோ Dr ஏ.பரமசிவம், பேராக் மாநில MIYDF தலைவர் டத்தோ Dr பிரபாகரன் மற்றும் மலேசிய புளுஸ் பிரதர்ஸ் தலைவர் Dr k.ராஜேஸ்வரன் ஆகியோர் உதவி நல்கியுள்ளதாகவும் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி கூறிக் கொள்வதாகவும் டத்தோ ரவின் எஸ்.பிள்ளை குறிப்பிட்டுள்ளார். தொடர்புக்கு ரமேஷ்-012-4885835, ஜேக்- 016-2234299 அல்லது சேம் 012-5242418.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button