Malaysia

உறுப்பினராக சேர்ந்து பயணிக்க இளம் தொழில் முனைவர்களுக்கு பேராக் இந்தியர் வர்த்தக சபை அழைப்பு.

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

ஈப்போ,நவ.2-
பேராக் இந்தியர் வர்த்தக சபை நிர்வாகம் இளம் இந்திய தொழில்.முனைவர்களை இணைத்து கொண்டு செயல்ப்பட தனது உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் ரவிசங்கர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

வியாபார துறையில் காலெடுத்து வைக்கும் பட்சத்தில் அதன் நெழிவு சுழிவு நுணிக்கங்களை
தெரிந்து கொள்ள
பேராக் இந்தியர் வர்த்தக சபை ஆலோசனை வழங்க தயாராக
இருப்பதாக சொன்னார்.

இதர மாற்று இன சார்பு வர்த்தக சங்கத்தில் இளம்
தொழில் முனைவர்கள் இணைந்து நன்மையடைவது கண்கூடாக பார்க்க
நேரிடுவதாக சுட்டிக்காட்டிய அவர் காலம் தாழ்த்தாது உறுப்பினராக சேர
அழைப்பு விடுத்தார்.

இதனில், தம்மை ஈப்போ ஜாலான் சுல்தான் யூசோப் சாலை வி.கே.கே.கல்யாணசுந்தரம் பட்டு.மாளிகை
கடையில் சந்தித்து தகவல் பெற அவர் அழைப்பு விடுத்தார்.
தம்மை 012- 3452611 என்ற எண்ணில் சந்தித்து பேசலாம் என்றார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button