
நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்களின் உடல் மீட்பு
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

பாரிட், பிப்.20-
தஞ்சோங் பெலாஞ்சா கம்போங் தெபுஸ் கிராமம் அருகாமை பேராக் ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க முற்ப்பட்ட போது இடறி விழுந்து நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட 16 வயது நிரம்பிய உடல் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கும் இரவு 7 மணிக்கிடையிலும் மீட்கப்பட்டதாக பேராக் தெங்கா மாவட்ட போலிஸ் தலைவர் ஹாபிசுல் எல்மி ஹம்சா தெரிவித்தார்.
திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் சுல்தான் முகமட் ஷா தேசிய இடை நிலப்பள்ளி மாணவர்கள் என்றார்.



