Malaysia

தஞ்சோங் துவாலாங் தீம் பார்க் நுழைவு இலவசமா?

தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்

தஞ்சோங் துவாலாங், நவ.19-
பத்து காஜா – தஞ்சோங் துவாலாங் ப்
பழைய சாலை கிந்தா வேலி தோட்டம் அருகாமை தஞ்சோங் துவாலாங் தீம் பார்க் பொழுது போக்கு பூங்கா
விற்கு விஜயம் புரியும் நினைக்கும்
60 வயது மேற்ப்பட்ட மூத்த பிரஜைகள் மற்றும் நான்கு வயது கீழ்ப்பட்ட சிறார்களுக்கு இலவச நுழைவு சலுகை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு பேராக்கிற்க்கு வருகை தரும் ஆண்டாக அறிவிப்பு செய்யப்பட்டு அதன் கால கெடு இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுற ஒவ்வொரு நுழைவிற்க்கு 30 சதவிகிதம் கழிவு விலை சலுகை வழங்கப்படுகின்றது.

பேராக் அரசு. பேராக் சுற்றுப்பயண துறை மற்றும் தஞ்சோங் துவாலாங் எஸ்கேப் நிருவனம்
கூட்டு முயற்சியின் பயனாக நவம்பர் 15 ஆம் தேதி தொடக்கம் ஆண்டு இறுதி வரை இந்த
சலுகை வழங்கப்படும்.

இந்த தீம் பார்க் சுற்று வட்டார் தோட்டம்,கிராமம் , அருகாமை தஞ்சோங் துவாலாங் , மாலிம் நாவார் வாழ் இந்தியர்கள் இந்த
வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button