
இழந்த தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் டத்தோ ஸ்ரீ அமாட் ஜாகீட் ஹாமீடி கட்டளை
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, நவ.24-
ஈப்போ அமான் ஜெயா கசூரினா மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேராக் மாநில தேசிய முன்னணி
மாநாட்டில் உரையாற்றிய
தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட்
ஜாகீட் ஹாமீடி வரும் பொது தேர்தலில் கடந்த
தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட நாடாளமன்றம் சட்டமன்ற தொகுதியை மீட்டு
வெற்றியை பதிக்க
கேட்டு கொண்டார்.
வரும் பொது தேர்தலில் பொது தேர்தலில் பழைய
முகம் பதில் புதிய
முகங்களை குறிப்பாக இளைஞர் மகளிர்
போன்றவர்களை போட்டியிட வாய்ப்பளிக்க
வேண்டும் என உரையாற்றுகையில் மண்டபத்திலிருந்து கைத்தட்டல் பலமாய் இருந்தது.
இப்போது பதவியில் இருப்பவர்கள் தொடந்து பதவியில்
இருப்பார்கள் எனபது நிச்சயமில்லை.
பதவியில் இருக்கும் மக்கள்
பிரதி நிதிகள்
களம் இறங்கி அவர்களின்
தேவைகளை பூர்த்தி செய்ய மறக்கக் கூடாது என துணை பிரதமரான அவர் நினைவுறுத்தினார்
இந்த மாநாட்டில் பேராக் மஇக தொடர்பு குழு ஏற்ப்பாட்டில் 400 க்கும் மேற்ப்பட்ட அங்கத்தினர்கள்
கலந்து சிறப்பித்தனர்.



