
அமெரிக்க வரி நடவடிக்கையின் தாக்கம் குறித்து மே 5 ஆம் தேதி சிறப்பு மக்களவை கூட்டம் நடைபெறும்
கோலாலம்பூர் – மலேசியாவிற்கு எதிரான அமெரிக்காவின் கூடுதல் வரியின் பொருளாதார தாக்கம் குறித்து விவாதிக்க மே 5 ஆம் தேதி மக்களவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வேண்டுகோளுக்கிணங்க இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக மலேசிய நாடாளுமன்றம் அறிவித்தது.
“இந்த சிறப்புக் கூட்டத்தின் வழி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் வரிகளை விதிக்க அமெரிக்காவின் நடவடிக்கை, மலேசியப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம், குறுகிய மற்றும் நடுத்தர கால தீர்வுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சில தொழில்துறை கொள்கைகளை மறுஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசாங்கத்தின் பதில் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, அமைச்சர்களிடமிருந்து விளக்கமளிப்பதாகும்” என்று இன்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

மேலும் சர்வதேச வர்த்தகப் போரின் தாக்கத்தை எதிர்கொண்டு, எதிர்காலத்தில் மலேசியப் பொருளாதாரத்தின் மீள்தன்மையை உறுதி செய்வதில் நாட்டின் நீண்டகால பொருளாதாரத் திட்டமிடல் குறித்தும் இந்த சிறப்புக் கூட்டம் விவாதிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கான பதில் குறித்து தொடர்புடைய அமைச்சர்களின் விளக்கங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது



