
மலேசியா-இந்தியா இருவழி வர்த்தக வாய்ப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் டாக்டர் என்.ஜெகதீசன் தகவல்
கோலாலம்பூர்,பிப்.12-
மலேசியா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவர்கள் தங்கள் வர்த்தகத்தை இணைந்து மேம்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று Tamil Nadu Chamber of Commerce and Industry எனும் தமிழ்நாடு வணிகர் மற்றும் தொழில்துறை சங்கங்களின் பேரவையின் தலைவர் டாக்டர் என்.ஜெகதீசன் கூறினார்.
இருநாடுகளின் தொழிலதிபர்களும் இணைந்து பணியாற்றுவதன் வழி இருநாடுகளின் பல வர்த்தகப் பொருட்கள் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதோடு வர்த்தகத்தை மேம்படுத்தும் வாய்ப்பும் ஏற்படும் என்று கோலாலம்பூர் சிலாங்கூர் கிளப்பில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் மற்றும் தொழில்துறை சங்கங்களின் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் டாக்டர் ஜெகதீசன் அவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் மற்றும் தொழில்துறை சங்கங்களின் பேரவையின் 100 ஆண்டுகள் நிறைவையொட்டி
சிலாங்கூர், இந்திய வர்த்தக சபை, தொழில்முனைவர்கள் தலைவர் டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன் ஆதரவில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 75 பல்துறை சார்ந்த வர்த்தகர்கள் கடந்த 9ஆம் தேதி கோலாலம்பூர் வந்தனர். கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி டத்தோ ஷாண் தலைமையில் வர்த்தக கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு பிப்ரவரி 10ஆம் தேதி சிலாங்கூர் கிளப்பில் வர்த்தக கூட்டம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளின் வர்த்தக சபைகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இ்ந்தியாவில் இருந்து மொத்தம் 5,260 பொருட்கள் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனையில் உள்ளன. அது போலவே மலேசியாவில் இருந்தும் பொருட்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த வர்த்தக தொடர்பு நிலைபெற தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை தொழில்முனைவர்கள் தலைவர் டத்தோ சண்முகநாதன் ஒத்துழைப்பில் தொடர்ந்து வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் ஜெகதீசன் சொன்னார்.
இதனிடையே இந்த கூட்டத்தோடு மட்டும் நின்று விடாமல் தொடர்ந்து மலேசியா-இந்தியா ஆகிய இருநாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படும் என்று சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை தொழில்முனைவர்கள் தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
இருநாடுகளின் வர்த்தக சபைகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் வர்த்தக வாய்ப்புகளை இருதரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக 100 வர்த்தகர்கள் விரைவில் தமிழ்நாடு, மதுரைக்கு வருகை மேற்கொள்வார்கள் என்று டத்தோ சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்று நாள் வர்த்தக மாநாட்டில் 75 இந்திய வர்த்தகர்கள் பங்கேற்றனர். அது போலவே மலேசியாவை சேர்ந்த வர்த்தகர்களும் பங்கேற்றனர். இந்த மூன்று நாள் வர்த்தக மாநாட்டில் பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் ஐயா மலேசிய பாண்டியன் அவர்களின் 78ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த மலேசிய பாண்டின் கடந்த 50 ஆண்டுகளாக மெட்டல் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவரது புதல்வர் S.P.வரதராஜூ நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



