Malaysia

ஈசா தற்கொலை விவகாரம் இந்திய பெண் கைது

கோலாலம்பூர்,ஜூலை 8-
ஈசா என்ற இளம் பெண்ணை இணைய பகடிவதை உட்படுத்திய இந்திய இளம் பெண்ணை செந்தூல் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் நேற்று அதிகாலை 1.40 மணியளவில் 39 வயது மதிக்கத்தக்க அந்த இந்திய இளம்பெண்ணை ரவாங், புக்கிட் பெருந்தோங்கில் கைது செய்யப்பட்டார். செந்தூல் போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்ட டிக்டாக்கில் நன்கு பிரபலமான அப்பெண் மூன்று நாட்கள் போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்படவிருப்பதாக செந்தூல் போலீசார் தெரிவித்தனர்.

Shalini alpha queen என்ற டிக்டாக் கணக்கில் பல்வேறு இணைய பகடிவதைகளை மேற்கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இணைய பகடிவதை தொடர்பில் மேலும் ஒருவரை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.

இணைய பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட இந்திய இளம் பெண் ஈஷா விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்
பொதுமக்கள் பல பொலீஸ் புகார்கள் செய்த நிலையில் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button