
Uncategorized
நீதிமன்றத்தில் சந்திப்போம் பேராக் பாஸ் ஆணையர் மீது சீரி பாய்ந்த ஙா கோர் மெங் .
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ,ஆக்-26
தெலுக் இந்தான் சாய்வு கோபுர வளாகத்தில் கலாச்சார.பேரணி
நடந்த போது தாம்
கோலாலம்பூரில் ஒரு கூட்டத்தில் இருந்ததாக விளக்கமளித்த பேராக் ஜசெக. தலைவர் ஙா கோர் மெங் , தன் பெயரை சம்பந்தப்படுத்தி அறிக்கை வெளயிட்ட பேராக
பாஸ் ஆணையர் ராஸ்மான் ஜக்காரியாவை நீதி மன்றத்தில் ச்ந்திக்க போவதாக
சூளுரைத்தார்.
மலேசிய குவான் கோங் கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்விற்க்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்ற அவர் நீதி மன்ற.நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில்
தனது வழக்கறிஞர் குழுவை பணித்திருப்பதாக
வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சரான.அவர் இங்குள்ள ஜாலான் ஹோஸ்பிட்டால் ருக்கூன் தெத்தாங்கா நிலைய சமுக மையத்தை திறந்து
வைத்த பின் தெரிவித்தார்.



