
International
வீடற்று தவிப்பவர்களுக்கு போர்வை உதவி
ஈப்போ,டிச.21-
குளிர் காலங்களில் வீடற்று தவிப்பவர்களுக்கு போர்வை உட்பட தேவையான பொருட்களை விமலன் சந்திரசேகரன் மற்றும் அணியினர் வழங்கியுள்ளனர்

மழைக் காலங்களில் பொதுவாக மக்கள் வீட்டில் இருப்பதையே விரும்புவார்கள். அந்த வகையில் தமிழ்த் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பினாங்கு தீவில் சீன கோவில் முன் மக்கள் சேவகர் விமலன் சந்திரசேகரன் போர்வையுடன் பல பொருட்களை வீடற்றவர்களுக்கு வழங்கியுள்ளார்.
அவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்ட பைகளில் மருந்து, பற்பசை,உணவு, துண்டு உட்பட இன்னும் பல பொருட்கள் வைக்கப்பட்டதாக விமலன் கூறினார்.
மேலும் அனைவருக்கும் சுவையான நாசி கண்டார் உணவும் வழங்கப்பட்டது
மழைக்காலங்களில் வீடற்றவர்களுக்கு இந்த பொருட்கள் பொக்கிஷம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.



